paal vadiyum mugam

ராக : நாட்ட குறிஞ்சி
தாள : அதி

பல்லவி:
பால் வடியும் முகம் நினைந்து நினைந்து என் உள்ளம் பரவசம் மிகவாகுதே கண்ணா
(பால் வடியும்)

அநுபல்லவி:
நீலக் கடல் போலும் நிறத்தழகா எந்தன் நெஞ்சம் குடி கொண்ட அன்று முதல் இன்றும்
எந்தப் பொருள் கண்டும் சிந்தனை செல்லாதொழிய (பால்)

சரணம்:
வான முகத்தில் சற்று மனம் வந்து நோக்கினும் உன் மோன முகம் வந்து
தோணுதே
தெளி வான தண்ணீர் தடத்தில் என் சிந்தனை மாறினும் உன் சிரித்தத முகம் வந்து காணுதே
சற்று கானக் குயில் குரலில் கருத்து அமைந்திடினும் அங்கும் உன் கானக் குழல் ஓசை மயக்குதே

கருத்த குழாலொடு நிறத்த மயில் இறகு இறுக்கி அமைத்த திரத்திலே
காண மயில் ஆடும் மோனக்  குயில்  பாடும்  நீல  நதியோடும்  வனத்திலே
குரல் அமுத எழில் ஆசை (ய) குழைய வரும் இசையின் குழாலொடு மிளிர் இல கரத்திலே

கதிரும்  மதியும்  என  நயன  விழிகள்  இரு  நளினமான  சலனத்திலே
காளிங்கன் சிரத்திலே கதித்த  பதத்திலே
என்  மனத்தை  இருத்தி  கனவு  நனவினோடு
பிறவி பிறவி தோறும்
கனிந்து உருக வரம் தருக பரம் கருணை (பால்)

This entry was posted in Tamil. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s