புல்லாகிலும் நெடுநாள் நில்லாது

புல்லாய்ப் பிறவி தரவேண்டும் – கண்ணா
புல்லாய்ப் பிறவி தரவேண்டும் – கண்ணா
புனிதமான பல கோடிபிறவி தந்தாலும்
பிருந்தாவனம் அதில் ஒரு
(புல்லாய்)

ராகம்: செஞ்சுருட்டி
தாளம்: ஆதி

புல்லாகிலும் நெடுநாள் நில்லாது – ஆதலினால்
கல்லாய்ப் பிறவி தரவேண்டுமே – கண்ணா
கமலமலர் இணைகள் அணைய எனதுஉள்ளம்
புளகிதம் உற்றிடும் பவம அற்றிடுமே
(புல்லாய்)
(புளகிதம்=இன்பம்; பவம்=பிறவி)
ஒருகணம் உன்பதம் படும் என்மேலே
மறுகணம் நான் உயர்வேன் மென்மேலே
திருமேனி என்மேலே
அமர்ந்திடும் ஒருகாலே

திருமகள் எனமலர் பெயர்ந்தடி உன்னைத்
தொடர்ந்த ராதைக்கு இடம் தருவேனே
திசைதிசை எங்கணும் பரவிடும் குழலிசை
மயங்கி வரும் பல கோபியருடனே

சிறந்த ரசமிகு நடம் நீயாடவும்
சுருதியொடு லயமிக கலந்து பாடவும்
திளைப்பிலே வரும் களிப்பிலே
எனக்கிணை யாரென மகிழ்வேனே

தவமிகு சுரரொடு முனிவரும் விய நான்
தனித்த பெரும்பேர் அடைவேனே
எவ்வுயிர்க்கும் உள் கலக்கும் இறைவனே
யமுனைத் துறைவனே
(புல்லாய்)

This entry was posted in Oothukadu, Tamil. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s